அடுத்த வருடம் தேர்தலை நடத்தும் எண்ணம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொழில்சார் வல்லுநர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது உள்ள10ராட்சிமன்ற சபை உறுப்பினர்களின் எண்ணிக்கைய 4,000 ஆகக் குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேபோன்று பாராளுமன்ற தேர்தல் தொடர்பிலும் அவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அவரது ஒட்டுமொத்த கதையை பார்க்கும்போது தேர்தலை நடத்தாமல் இருக்க வேண்டும் என்பதே அவருடைய நிலைப்பாடக உள்ளது.
எதிர்வரும் வருடம் தேர்தலை நடத்துவதற்கு அவருக்கு எந்தவித தேவையும் இல்லை என்பதை போன்றே ஜனாதிபதியின் கருத்துக்கள் அமைந்திருந்தன.
எதையாவது செய்து தேர்தலை நடத்தாமல் இருப்பதே அவரது திட்டமாக உள்ளது.
இதனையே அவர் நேற்றைய கருத்துக்களிலும் வலியுறுத்தி இருந்தார்.
உள்ள10ராட்சிமன்றங்களை எடுத்துக்கொண்டால் அடுத்த வருடம் மார்ச் மாதம் உள்ள10ராட்சிமன்ற தேர்தலை நடத்த வேண்டும்.
தேர்தலுக்கான மாற்றங்கள் செய்யலாம். உள்ள10ராட்சிமன்ற தேர்தலில் திருத்தங்களை கொண்டுவந்தாலும்கூட அந்தத் தேர்தலை நடத்தும் அவருக்கு இல்லை என்பதே நிருபணமாகியுள்ளது.
அதேபோன்று பாராளுமன்ற தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உள்ளார்.
பாராளுமன்றத்தில் தற்போது சுமுகமான நிலைமை இல்லை.
69 இலட்சம் மக்களும் தெரிவு செய்து அனுப்பிய ஜனாதிபதி தற்போது இல்லை.
அதேபோன்று அதிக பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்து பிரதமராக தெரிவாகிய ஜனாதிபதியும் தற்போது இல்லை.
மொட்டுக் கட்சிக்கு ஆதரவாளித்த 50 சதவீதமானோர் தற்போது எதிர்க் கட்சியில் அமர்ந்துள்ளனர்.
எனவே பாராளுமன்றத்தில் இன்று ஒருவகையான குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
மக்கள் ஆணை பாராளுமன்றத்தில் எதிரொலிப்பதில்லை.