29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அட்டப்பள்ளம் பிரதேச வீரர்களுக்கு
விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் உள்ள விளையாட்டு வீரர்களின் நன்மை கருதி இன்று விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.அவுஸ்ரேலியா சிட்டினியில் உள்ள முத்துக்கறி உணவக உரிமையாளர் லக்ஸன் நிதியுதவியில் இணைந்த கரங்கள் ஊடாக இந்த உபகரணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

அட்டப்பள்ளத்தை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 22 உறுப்பினர்களுக்கான விளையாட்டு பாதணிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான லோ.கஜரூபன்,சங்கீத்,தஜன் ஆகியோர் கலந்துகொண்டு இவற்றினை வழங்கிவைத்ததுடன் நிகழ்வில் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles