அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்கா தாமதிப்பதாக ஈரான் குற்றச்சாட்டு

0
124

அணுசக்தி ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க அமெரிக்கா தாமதம் செய்து வருவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத் கதிப்சாதே கூறும்போது, “ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே இன்னும் ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன. அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதில் தாமதம் செய்து வருகிறது. கடந்த வாரம் ஹென்றி மோரா (ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்) மூலம் அமெரிக்க வழங்கிய செய்தி, ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதற்கான காலத்தை நீடிக்கக் கூடியதாக இருக்கிறது” என்றார்.
ஈரான் கடந்த ஆண்டு முதலே பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ரஷ்யாவுடன் நேரடியாகவும், அமெரிக்காவுடன் மறைமுகமாகவும் அணுசக்தி ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் முயற்சிகளில் ஈரான் ஈடுபட்டு வருகிறது.