அணுசக்தி உடன்படிக்கை குறித்த ஐநா உச்சிமாநாட்டை ரஸ்யா வேண்டுமென்றே தடுக்கின்றது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் குற்றம்சாட்டியுள்ளார்
உக்ரைன் அணுஉலைக்கு அருகில் கடும் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நியுயோக்கில் ஐநாவில் 151 நாடுகள் மத்தியில் நான்குவார பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற பின்னரும் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தம் குறித்த மறு ஆய்வு மாநாடு வெற்றியளிக்காமமை குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்திற்கான ஆதரவு அறிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு ரஸ்யா மறுத்துள்ளது.
குறிப்பிட்ட அறிக்கை ஆயுதகளைவுபரவல் தடை அணுசக்தியின் அமைதியான நோக்கங்களிற்கான பயன்பாடு போன்ற உடன்படிக்கையின் நோக்கங்களை மீள உறுதி செய்யும் விதத்தில் காணப்பட்ட அறிக்கையையே ரஸ்யா ஏற்றுக்கொள்ள மறுத்;துள்ளது.
உக்ரைனின் ஜபோரிஜியா அணுமின் நிலையம் போன்றவற்றின் கட்டுப்பாட்டை உக்ரைனின் திறமை வாய்ந்த அதிகாரிகள் உறுதி செய்வது என்ற வாக்கியமும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
ரஸ்யா வேண்டுமென்றே இந்த விடயத்தில் முன்னேற்றத்தை தடுத்துள்ளது அதன் நடவடிக்கைகள் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கங்களிற்கு சவால் விடும் விதத்தில் அமைந்துள்ளன என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.