அதானியின் திட்டம் மறு மதிப்பீடு!

0
31

இந்திய அதானி குழுமத்தின் காற்றாலை மின்சாரத் திட்டத்தை மறு மதிப்பீடு செய்ய அமைச்சரவை இரண்டு குழுக்களை நியமித்துள்ளது.

அத்துடன் இந்த குழுக்களின் செயல்பாடுகள் குறித்து சட்ட ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்கள், திட்டங்கள் தொடர்பில் மதிப்பிடப்பட்ட செலவுகள், சட்ட இணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கைகள் உட்பட அதானி காற்றாலை மின் திட்டத்தின் பல அம்சங்களை மறு மதிப்பீடு செய்யவுள்ளன.

மன்னார் மற்றும் பூநகரியில் 484 மெகாவோட் காற்றாலை மின்சாரத் திட்டத்தில் அதானி குழுமம் தற்போது 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை
முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.