அதிகமாக பகிரப்படும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்
ரிக் ரொக் பதிவு

0
222

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ரிக் ரொக்கில் பதிவிட்டுள்ள, ‘எல்லோரும் எனக்கு எதிரியாக இருக்க விரும்புகிறார்கள் என்ற வாசகத்துடனான பாடலுடன், அவரது படங்களைக் காட்டும் பதிவு ஒன்று, அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பாடலின் வார்த்தைகள், ‘எல்லோரும் என் எதிரியாக இருக்க விரும்புகிறார்கள்…..
அனுதாபத்தை விட்டுவிடுங்கள், எல்லோரும் என் எதிரியாக இருக்க விரும்புகிறார்கள்’ என குறிப்பிடப்படுகின்றது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கைகளை புறக்கணித்ததாக, மைத்ரிபால சிறிசேனவை, சிறையில் அடைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ரிக் ரொக் பதிவு வெளியாகியுள்ளது.