அதிகரிக்கும் கொரோனா பரவல்

0
99

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கையாக பொது இடங்களில் முக கவசம் அணியும்படி, மக்களுக்கு சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆசிய நாடான சிங்கப்பூரில், ‘புளூ’ எனப்படும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அங்கு கொரோனா பாதிப்பும் கடந்த சில வாரங்களில் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பால் ஒரு நாளில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 225இல் இருந்து 350ஆக உயர்ந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நான்கில் இருந்து ஒன்பதாக உயர்ந்துள்ளது.