நாட்டில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதுடன், சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால், சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று விசேட தோல் சிகிச்சை வைத்தியர் நிபுணர் இந்திரா கஹ்விட்ட எச்சரித்துள்ளார்.
இதனால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
குழந்தைகள் உட்பட பாடசாலை மாணவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும், இது தொடர்பில் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமானது எனவும் தோல் சிகிச்சை வைத்திய நிபுணர் இந்திரா கஹ்விட்ட குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, தோலில் வெள்ளைப் புள்ளிகள், தோல் அரிப்பு, வியர்வை கொப்புளங்கள், வியர்வை தேங்கி மார்பகங்களில் உருண்டை வடிவ பூஞ்சை போன்றவை இந்த தொற்று நிலைகளாக அடையாளம் காணப்படுகின்றன.
குறிப்பாக பூஞ்சை தொற்று ஏற்பட்டால் மருந்தகத்திற்கு சென்று மருந்துகளை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.