அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இரண்டாவது நாளாக தொடர்வு!

0
71

அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இரண்டாவது நாளாகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக அதிபர் ஆசிரியர் சம்பளப் பிரச்சினைக்கு எதிரான கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் உலப்பன சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டில் தவணை பரீட்சை இடம்பெறும் பாடசாலைகள் தவிர ஏனைய அனைத்து பாடசாலைகளின் அதிபர் ஆசிரியரியர்களும் இந்த சுகயீன விடுமுறை போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டம் சாதகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் பரீட்சை இடம்பெறும் சில பாடசாலைகளை ஊடகங்களின் வாயிலாக காண்பித்து தொழிற்சங்க நடவடிக்கை சாதகமாக அமையவில்லை என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனாலும் கூட எம்முடைய தொழிற்சங்க நடவடிக்கையானது வெற்றிகரமான முறையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் எம்முடைய சம்பளப்பிரச்சினைக்கான தீர்வை எந்த அரசாங்கத்தினாலும் வழங்க முடியவில்லை. ஆகவே இவ்வருடத்திற்குள் சம்பளப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தருமாறு ஜனாதிபதியிடம் தெரிவித்துக்கொள்கின்றோம்.