அதிபர், ஆசிரியர்கள் மீது கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம்!

0
74
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டத்தின் மீது பொலிஸாரால் நீர் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு கோட்டை பகுதி மற்றும் ஜனாதிபதி செயலக பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. எவ்வாறாயினும், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் பொலிஸாரின் தடைகளையும் மீறி ஜனாதிபதி செயலகம் நோக்கி நகர்ந்தது.
போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.கோட்டைக்கு முன்பாகவுள்ள வீதி முற்றிலும் தடை ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.