27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அதிரடியாக விளையாடிய ஷதப்கானை அஸ்வின் ஸ்டைலில் அவுட் செய்த பரூக்கி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகள் 3 ஒருநாள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி டாப்-3 வீரர்களான பஹர் ஜமான் (30 ரன்), இமாம் உல்-ஹக் (91 ரன்), கேப்டன் பாபர் அசாம் (53 ரன்) கணிசமான பங்களிப்பை வழங்கினர்.

அவர்களுக்கு பிறகு மிடில் வரிசை வீரர்கள் தடுமாறிய போதும் ஷதப் கான் நம்பிக்கை தந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்ட போது நசீம் ஷா பேட்டிங் செய்தார். எதிர் முனையில் ஷதப்கான் இருந்தார். முதல் பந்தை வீச வந்த பரூக்கி மன்கட் முறையில் அவரை அவுட் செய்தார். இதனால் விரக்தியில் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவர் 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.

இறுதியில் பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 24 வைடு உள்பட எக்ஸ்டிரா வகையில் 30 ரன்களை வாரி வழங்கியது ஆப்கானிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்தது. ஷதப்கானை ஆப்கானிஸ்தான் வீரர் பரூக்கி ரன் அவுட் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles