அதிவேக நெடுஞ்சாலையின் வேலிகளையும் விட்டு வைக்காத விசமிகள்!

0
141

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இரும்பில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலிகளை துண்டித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் 6 ஆவது கிலோமீற்றர் முதல் 13 ஆவது கிலோமீற்றர் தூண்களுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இரும்பில் அமைக்கப்பட்டிருந்த வேலிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ் வீரக்கோன் தெரிவித்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலைக்குள் மனிதர்கள் மற்றும் விலங்குகள் நுழைவதை தடுப்பதற்காக இரும்பினால் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சிலர் துண்டித்து எடுத்துச் செல்கின்றனர். போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களாலேயே இரும்பு வேலிகள் துண்டிக்கப்பட்டு திருடப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறன நிலையில், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இரும்பில் அமைக்கப்பட்டிருந்த வேலிகள் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நடாத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ் வீரக்கோன் தெரிவித்துள்ளார்.