மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 48.5R நிலையத்தில் நேற்று (18) இரவு குருநாகலிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற வேன் ஒன்று அதே திசையில் பயணித்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் வேன் சாரதி உட்பட 07 பேர் காயமடைந்துள்ளதாகவும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 46 வயதுடைய மாகொல தெற்கு பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது . சடலம் மீரிகம வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் மீரிகம காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.