அது ‘வே’ அல்ல ‘பெ’ : இராதா விளக்கம்!

0
13

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து  பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் 2006 இல் திருமதி​ கே.ராதாகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து, நிதியை பெற்றுக்கொண்டதாக, நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் டாக்டர் அனுர கருணாதிலக்க பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) தெரிவித்தார்.

எனினும், அந்த வே.ராதாகிருஷ்ணன் நான் அல்ல, அந்த பெயர் பிரதியமைச்சராக இருந்த பெருமாள் ராதாகிருஷ்ணன் என்பதே சரியாக இருக்கும் என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன், பாராளுமன்றத்தில், வியாழக்கிழமை (07) தெரிவித்தார்.

சிறப்புரிமை பிரச்சினை எழுப்பிய வேலுசாமி ராதாகிருஷ்ணன், “2006 ஆண்டில் நான், பாராளுமன்றத்​தில் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, அக்காலப்பகுதியில் நான்,  மாகாண சபையின் உறுப்பினராக பதவி வகித்தேன்” என்று வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.