லங்கா சதொச ஊடாக சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 40 ரூபாவால் குறைத்துள்ளது. அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.
அத்துடன், பொன்னி சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 31 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 194 ரூபாவாகும்.
உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு, 280 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.