அத்துமீறும் இந்திய மீனவர்கள்- மீனவ அமைப்பு பிரதிநிதி கருத்து!

0
51

இந்தியாவால் தடை செய்யப்பட்ட தொழிலையும் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் மேற்கொண்டு வருகின்றனர் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய இழுவைமடித் தொழிலை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஈடுபடுகின்றாரா என்ற சந்தேகம் எழுவதாக, அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். யாழ். மாதகல் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.