கொழும்பு – அத்துருகிரியவில் உள்ள வணிக கட்டடத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், வணிக கட்டடத்தின் உரிமையாளர் உட்பட 06 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குழுவுடன், வணிக கட்டடத்தின் உரிமையாளரும் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பகல் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டுத் சம்பவத்தில், இருவர் உயிரிழந்ததுடன், 4 பேர் காயமடைந்தனர்.ஷகுறித்த தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய இரண்டு வாகனங்கள் இருவேறு இடங்களிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.