அநுரகுமார திஸாநாயக்க, அரசமைப்பை உருவாக்க இடமளியோம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவிப்பு!

0
70

நாட்டுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

புத்தளம் – சிலாபத்தில் திலித் ஜயவீரவுக்கு ஆதரவாக இடம்பெற்ற பரப்புரை கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தேசியத்தை பாதுகாப்பதற்காகவே குறுகிய காலத்தில் சர்வஜன சக்தி என்ற புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம்.

ஜனாதிபதித் தேர்தலில் பலர் போட்டியிடுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திஸநாயக்க, சஜித் பிரேமதாஸ ஆகியோரின் கொள்கை பிரகடன உள்ளடக்கம் ஒருமித்ததாக காணப்படுகிறது.

பகிரங்க விவாதம் ஒன்றில் ஈடுபடுவதற்கு ரணில், சஜித், அநுர, நாமல் ஆகியோருக்கு தற்றுணிவு கிடையாது. இவர்களால் எவ்வாறு நாட்டை நிர்வகிக்க முடியும்?

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஒருமித்த நாடு என்பதை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்ட புதிய அரசமைப்பை உருவாக்குவதாக அநுரகுமார திஸநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.