அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம்

0
344

உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்தத் தகவலை ஊடகங்களிடம் வெளியிட்டுள்ளார்.

கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பங்கேற்கும் 27 பிரதானக் கூட்டங்கள் மொட்டுக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.