அனிருத் வெளியிட்ட ‘ஓஹோ எந்தன் பேபி ‘ படத்தின் முதல் பாடல்

0
10

புதுமுக நடிகர் ருத்ரா கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ஓஹோ எந்தன் பேபி ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நட்சத்திரா..’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி இசையமைப்பாளரான அனிருத் வெளியிட்டிருக்கிறார்.

நடிகரும் , இயக்குநருமான கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தில் ருத்ரா,  மிதிலா பால்கர்,  அஞ்சு குரியன்,  மிஷ்கின்,  ரெடின் கிங்ஸ்லி , கருணாகரன்,  கீதா கைலாசம்,  பாலாஜி சக்திவேல்,  சுஜாதா பாபு , நிர்மல் பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார் . இன்றைய இளைய தலைமுறையினரின் இளமைக்கால வாழ்வியலை  மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.‌

ஜூலை மாதம் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மதுரா ..’ எனத் தொடங்கும் முதல் பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர்கள் கார்த்திக் நேதா மற்றும் ஏ. ஆர். ஆஷீக் ஆகியோர் எழுத, பின்னணி பாடகி பிரியா மாலி ,  பின்னணி பாடகர்கள் அபிஷேக் சுரேஷ் மற்றும் சத்ய நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

கதையின் நாயகனும், நாயகியும் அவர்களது நண்பர்களுடன் இணைந்து வாழும் இளமைக்கால வாழ்க்கையை மாண்டேஜஸ் என்ற திரை மொழி மூலம் படக் குழுவினர் வசீகரிக்கும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளதால் இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.