அனுமதிப்பத்திரமின்றி லொறியொன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை மரக்குற்றிகளுடன் மூவர் கைது

0
101

குருணாகல் அதிவேக வீதியில், அனுமதிப்பத்திரமின்றி லொறியொன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை மரக்குற்றிகளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மெல்சிறிபுர. கோகரெல்ல, மடஹபொல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 27, 41, 42 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, குருணாகல் அதிவேக வீதியில் பயணித்த லொறியொன்றை வழிமறித்து பொலிஸார் சோதனை செய்தபோது அந்த லொறியில் மரக்குற்றிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் அனுமதிப்பத்திரமின்றி மரக்குற்றிகள் கொண்டு செல்லப்படுவதும் தெரியவந்துள்ளது.

தேக்கு மரக்குற்றிகளே இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.