அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற 4 வாகனங்களுடன் சாரதிகள் கைது

0
72

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குள் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட மற்றும் உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச்சென்ற 4 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருப்பதுடன் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறவன்புலோ – கோவிலாக்கண்டிப் பகுதியில் 03/04 புதன்கிழமை அதிகாலை வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவியந்திரம் ஒன்றையும் அதன் சாரதியையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.