இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கான தனது மூன்று நாள், அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
அவர் அனுராதபுரத்திலிருந்து ஹெலிகாப்டரில் தென்னிந்தியாவில் உள்ள ராமேஸ்வரத்திற்குப் புறப்பட்டார், அதே நேரத்தில் அவருடன் வருகைதந்திருந்த தூதுக்குழு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
இதற்கிடையில், அவர் X இல் பதிவிட்டதாவது, “எனது வருகையின் போது வழங்கப்பட்ட அரவணைப்புக்கு ஜனாதிபதி திசாநாயக்க, மக்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“கொழும்பாக இருந்தாலும் சரி, அனுராதபுரமாக இருந்தாலும் சரி, இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது நமது இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக உத்வேகம் அளிக்கும்.” என குறிப்பிட்டுள்ளார்.