28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அபார ஆட்டத்துடன் 248 ஓட்டங்களை குவித்த இலங்கை

சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி தற்போது ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்ணான்டோ 96 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 59 ஓட்டங்களையும், பெத்தும் நிஸங்க 45 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக் கொண்டனர். ஏனைய வீரர்கள் பெரிதாக ஓட்டங்களை குவிக்கவில்லை.  அதன் அடிப்படையில் இந்திய அணி வெற்றி இலக்காக 249 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles