அமரர் அருட்பணி கலாநிதி அந்தனி ஜான் அழகரசன் அடிகளாரின் நான்கு நூல்கள் அறிமுக விழா நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.”குருத்துவ துறவற வாழ்வின் நினைவலைகள் ‘எனும் கருப்பொருளில் அருட்பணி கலாநிதி அந்தனி ஜான் அழகரசன் அடிகளார் எழுதிய அவரின் திராட்சைத் தோட்டத்திலே , புரட்சிக்கிறிஸ்து,அன்னை மரியாள் ஆரோபண இல்லம்,நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு என நான்கு நூல்களின் அறிமுக விழாவும் முகிழ்வானில் கிறிஸ்தவம் எனும் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மறை மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு சமூக தலைவரும் நூல் அறிமுக ஏற்பாட்டுக்குழு இயக்குனருமான
ஜி.ஜே.சாந்தகுமார் ஒழுங்கமைப்பில் செங்கலடி மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி செபஸ்ரியன் இக்னேசியஸ் அடிகளாரின் தலைமையில் இறைவணக்கத்துடன் ஆரம்பமான நூல்கள் அறிமுக விழா நிகழ்வில் அருட்தந்தையின் உருவ படத்திற்கு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் ஆண்டகையினால் சுடர் ஏற்றி அஞ்சலிசெலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஆசிரியர் உரையினை அருட்பணி எ.தேவதாசன் அடிகளாரும் நூலாசிரியரின் அனுபவ பகிர்வினை அருட்பணி சி.வி.அன்னதாஸ் அடிகளார் வழங்கியதோடு நூலாசிரியர் அறிமுகத்தை அருட்பணி நவாஜி அடிகளாரினால் அறிமுகப்படுத்தப்பட்டது.மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வெளியிட்டு வைக்க முதல் பிரதியினை கனடா உதவும் பொற்கரங்கள் அமைப்பாளர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை,சிறப்பு பிரதிகளை மட்டக்களப்பு சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மைய தலைவர் பாவலர் சாந்தி முஹையித்தீன்,மட்டக்களப்பு பலசமய ஒன்றிய செயலாளர் அருட்பணி கே.ஜெகதாஸ் பெற்றுக்கொண்டார்
அருட்பணி கலாநிதி அந்தனி ஜான் அழகரசன் அடிகளாரின் வாழ்க்கை வரலாறு காணொளியாக காட்சிப்படுத்தப்பட்டதுடன் நான்கு நூல்களின் அறிமுகமும், முகிழ்வானில் கிறிஸ்தவம் எனும் இறுவெட்டு வெளியீட்டு வைக்கப்பட்டது.நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் ஆண்டகை,மட்டக்களப்பு மறை மாவட்ட அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,அருட்பணி கலாநிதி அந்தனி ஜான் அழகரசன் அடிகளாரின் குடும்ப உறுப்பினர்கள் ,பொதுநிலையினர் என பலர் கலந்துகொண்டனர்