அமெரிக்காவின் மாகாண துணைநிலை ஆளுநராக இந்திய வம்சாவளி பெண்!

0
137

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண துணைநிலை ஆளுநராக இந்திய வம்சாவளி பெண் அருணா மில்லர் பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுள்ளார். அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்று கொண்ட முதல் பெண் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்த அருணா மில்லர், தந்தையின் பணிநிமித்தம் காரணமாக பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் மேரிலாண்ட் மாகாண துணை நிலை ஆளுநர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் நேற்றைய தினம் பதவியேற்றுள்ளார். மேரிலாண்ட் மாகாணத்தின் துணை நிலை ஆளுநரான முதல் இந்தியர், முதல் பெண், முதல் கறுப்பினத்தவர் ஆகிய பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.