அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
கனடா எல்லை ஊடாகவே, அதிகளவானோர் உள்நுழைவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
கடந்த வருடம் ஜனவரி – ஜூன் காலகட்டத்தை ஒப்பிடுகையில், நடப்பாண்டு இதே காலகட்டத்தில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை 47வீதத்தால் அதிகரித்துள்ளது.இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு அதிகரிப்பதால் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.