புதிய வரிகள் குறித்து உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆனால் அந்த நாடுகள் பதிலுக்கு அற்புதமான தனிச்சிறப்பு வாய்ந்த எதையாவது வழங்க முன்வந்தால் மாத்திரமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் என குறிப்பிட்டுள்ளார்.
உலகநாடுகள் அமெரிக்காவை தங்கள் நலன்களிற்காக பயன்படுத்துகின்றன என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் தான் அதனை தடுத்து நிறுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
வரிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான பெரும்பலத்தை எங்களிற்கு தருகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாடும் எங்களை தொடர்புகொண்டுள்ளதுஎவராவது அற்புதமான அல்லது மிகச்சிறந்த விடயத்தை அமெரிக்காவிற்கு வழங்குவதாக தெரிவித்தால் நாங்கள் பேச்சுவார்த்தைகளிற்கு தயார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.