அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயல் காரணமாக, இதுவரை 18 பேர் மரணமாகினர். 15 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பனிப்புயலால் விமான சேவைகள், சாலை போக்குவரத்து, மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. “வெடிகுண்டு சூறாவளி” எனப்படும் பனிப்புயலால், சனிக்கிழமையன்று 2,300 அமெரிக்க விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. மேலும், வெள்ளிக்கிழமை 5,300 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
கடுமையான பனிப்புயல் தாக்கி 18 பேர் பலியாகினர் என்று கூறப்படுகிறது. வியாழக்கிழமை முதல் 15 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளிமண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் எழுந்த பனிப்புயல், அமெரிக்கா – கனடா எல்லையில் உள்ள ஏரிகளை உறையச் செய்துள்ளது. தேசிய வானிலை சேவை மையத்தின கருத்துபடி, வெப்பநிலை 48 பாகை செல்சியஸ் இருந்ததுள்ளது.
பனிப்புயலால், பல இடங்களில் 50இற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகின. வீடுகளும், வெளியே நிற்கும் கார்களும் பனியில் மூடியுள்ளன. சாலைகளில் பல அடி மீற்றருக்கு பனி மணிகள் படர்ந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அமெரிக்க மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.