அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் தம்பா பகுதியில் உள்ள இரவு நேர விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த இரவு நேர விடுதிக்குள் பிரவேசித்து, துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், அவரது நோக்கம் என்னவென்பது குறித்தும் கண்டறியப்படவில்லை. அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். அண்மைக்காலமாக, அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.