அமெரிக்காவில் தென்சூடான் கடவுச்சீட்டுக்கள் இரத்து!

0
28

தென்சூடான் கடவுச்சீட்டு  வைத்திருப்பவர்களுக்கான விசாக்களை உடனடியாக இரத்துச் செய்யுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ அறிவித்தார்.

ஆபிரிக்க நாடான சூடானில் அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்ந தாக்குதல் குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை  அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது:

தென்சூடான் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசாக்கள் உடனடியாக  இரத்துச் செய்யப்படுகிறது.

தென் சூடானின் இடைக்கால அரசாங்கம் அமெரிக்காவை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. அமெரிக்கா இதுவரை 300க்கும் மேற்பட்ட விசாக்களை இரத்துச் செய்துள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் யார் உள்ளே வரவேண்டும் , யார் வரக்கூடாது என்பதைத் தீர்மானிக்க  அந்நாட்டிற்கு உரிமை உண்டு.

நமது நாட்டின் குடியேற்றச் சட்டங்களை அமல்படுத்துவது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. ​​ஒவ்வொரு நாடும் சரியான நேரத்தில் தங்கள் குடிமக்கள் திரும்புவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தென் சூடான்கடவுச்சீட்டு  வைத்திருப்பவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்க, அவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.