ஒரு தசாப்த காலத்தின் பின்னர் முதன் முறையாக பாரிய பனிப்பொழிவையும், கடுமையான குளிரையும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நடுப்பகுதியில் ஆரம்பமான பனிப்புயல் எதிர்வரும் ஓரிரு நாட்களில் கிழக்கு நோக்கி நகரும் என அமெரிக்க தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கென்டி மற்றும் தென்கிழக்கு மானிலமான வேர்ஜீனியா ஆகியவற்றில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர மிசிசிப்பி மற்றும் புளோரிடா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளும் பாதிக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஆர்க்டிக் பிராந்தியத்தின் குளிர்ந்த காற்றின் ஒரு பகுதியான துருவ சுழலினால் ஏற்பட்ட தாக்கம் காரணமாகவே இந்த பாரிய காலநிலை தோன்றியுள்ளதாக வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்று காலை டெல்லியின் சில பகுதிகள் மூடுபனி, ஏற்பட்டதனால் புகையிரத மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் 160 இற்கும் மேற்பட்ட சேவைகளில் 8 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய சேவைகள் பாதிப்படைந்துள்ளன.