அமெரிக்காவின் கலிஃபோர்ணியா மாகாணத்தில் புகையிரத பணிமனை ஒன்றில் கடந்த புதன்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
சான் ஜோஸ் நகரில் உள்ள ரயில் பணிமனை ஒன்றில் புதன்கிழமை காலை சுமார் 6.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் எந்த மாதிரியான துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது, சம்பவம் எவ்வாறு, எதனால் நிகழ்ந்தது என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம். சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் சிலிகான் வேலி போக்குவரத்து துறை ஊழியர்களாவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.