அமெரிக்காவில் 41 கைதிகள் உயிரிழப்பு!

0
168

மத்திய அமெரிக்காவிலுள்ள தமரா பகுதியில் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் பெண் கைதிகள் இடையே இடம்பெற்ற மோதல் மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 41 பெண் கைதிகள் உயிரிழந்தனர். 

இதில் 26 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்கள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டதோடு ஏராளமான கைதிகள் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

ஆனால் கைதிகள் ஆவேசத்துடன் மோதிக் கொண்டதால் உடனடியாக கட்டுக்குள் வரவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பிறகு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.