அமெரிக்காவிற்கு பயணித்த இந்தியாவிற்கு சொந்தமான விமானம் ஒன்றிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன் காரணமாக இந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
மும்பையிலிருந்து இன்று காலை அமெரிக்காவின் நியூயோர்க் நோக்கி ஏர் இந்தியாவிற்குச் சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 303 பயணிகளும் 19 ஊழியர்களுமாக 322 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. விமானம் பயணித்துக் கொண்டிருந்த போது வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்தே குறித்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் விசாரணைகளின் போது இந்த தகவல் போலியானது எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அந்த நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.