அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் கட்டளைத்தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே.பப்பாரோ உள்ளிட்ட தூதுக்குழு வெள்ளிக்கிழமை (21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை சந்தித்தனர்.
கடற்படை தளபதி மற்றும் அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி ஆகியோருக்கிடையில் நீண்டகாலமாக நீடிக்கும் அமெரிக்க – இலங்கை பாதுகாப்புப் பங்காண்மையினை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காகவும், இந்தோ-பசிபிக் பகுதியில் பிரரந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான அமெரிக்காவின் தொலை நோக்குப்பார்வை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
அங்கு, அட்மிரல் சாமுவேல் ஜே.பப்பாரோவினால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பப்பாரோ வலியுறுத்தினார். மேலும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், இரு தரப்பினரும் நினைவு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.
கடற்படைத் தலைமையகத்தில் பார்வையிட்ட பின்னர், அட்மிரல் சாமுவேல் ஜே பப்பாரோ அமெரிக்காவில் இருந்து இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட விஜயபாகு கப்பலை பப்பாரோ பார்வையிட்டு அதன் செயற்பாடுகளை அவதானித்ததுடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சுங்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
விஜயபாகு கப்பலை கடல்சார் பாதுகாப்பிற்காக திறம்பட பயன்படுத்துவது குறித்தும், கடல் பிராந்தியத்தில் பாரம்பரியமற்ற கடல்சார் சவால்கள் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்த விஜயபாகு கப்பலால் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்தும் அட்மிரல் சாமுவேல் ஜே. பப்பாரோவுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், கடல் பிராந்தியத்தில் உள்ள பொதுவான கடல்சார் சவால்களை முறியடிக்கும் பங்காளித்துவத்தை வலுப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் நோக்கத்துடன், அமெரிக்காவிலிருந்து இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ள ஆழ்கடல் தாக்குதல் கடற்படை கப்பல்கள் கடற்படையுடன் இணைக்கப்பட்ட கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மிகவும் பயனுள்ள சேவையை ஆற்றி வருகின்றது தொடர்பாக கலந்துறையாடப்பட்டது.