அமெரிக்க – இலங்கை நட்புறவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாட, அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இலங்கை வரவுள்ளார். விக்டோரியா நூலண்ட் இன்று முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். நேபாளம், இந்தியா வியஜத்தை முடித்து, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அவர் அமெரிக்க – இலங்கை நட்புறவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை உறுதி செய்வார் என தெரிவிக்கப்படுகிறது.
Home முக்கிய செய்திகள் அமெரிக்க-இலங்கை நட்புறவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாட இலங்கை வருகிறார் நூலண்ட்!