அமெரிக்க எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தல்: கமலா ஹாரிஸ் ஆரூடம்

0
68

நவம்பர் மாதம் 5ம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான போராட்டம் என, ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜோர்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே, கமலா ஹாரிஸ் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த தேர்தலில் நாம் கடுமையான பணிகளை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் கடினமாக உழைப்பது நமக்கு புதிதல்ல. உங்கள் உதவியுடன் நவம்பர் மாதம்; நாம் வெற்றியைப் பெறப்போகின்றோம்.
கடுமையான போராட்டங்கள் எனக்கு பழக்கப்பட்டவை. நான் நீதிமன்றில் சட்டத்தரணியாக பணியாற்றியிருக்கின்றேன். தினமும் நீதிபதியின் முன்பாக ‘ நான் மக்களுக்கான கமலா ஹாரிஸ்’ என்று பெருமையாகக் கூறுவேன்.

எனது தரப்பு எப்போதும் மக்களின் தரப்புத்தான். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை எதிர்த்து போராடியிருக்கின்றேன். அந்த போராட்டங்கள் எதுவும் எளிதாக இருந்ததில்லை. அதேபோல தேர்தல் போராட்டமும் எளிதானதல்ல. இது அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான போராட்டம் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.