அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் மோடி!

0
26

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திப்பதற்கு முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா மீதான மேலதிக கட்டண குறைப்பு தொடர்பான திட்டங்களை தயாரித்து வருவதாக இந்திய அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதி அதிகரிக்கும் எனவும், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக போர் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
டொனால்ட் ட்ரம்ப் பல நாடுகள் மீது அதிக வரியை விதிக்க திட்டமிட்டுள்ளார். இந்தநிலையில் எதிர்வரும் நாட்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கவுள்ளார்.

அமெரிக்காவிற்கு ஆதரவாக உலகளாவிய வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.