அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீது டிரம்ப் குற்றச்சாட்டு

0
94

அயோவா மாகாணத்தின் ஸீடா் ரேபிட்ஸில் நேற்று முன்தினம் நடைபெற்ற குடியரசுக் கட்சி பொதுக்கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ”அமெரிக்க ஜனாதிபதி பைடனுடைய அரசியல் எதிரிகளுக்கு எதிராக அரசை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறாா். பைடனும் அவரது கூட்டாளிகளும் ஜனநாயகத்துக்கு துணை நிற்பது போல் தோற்றமளித்தாலும் பைடன் அமெரிக்க ஜனநாயகத்தை பாதுகாக்காமல் அழித்து வருகிறாா்.

போதைப் பொருள் கடத்தல்காரா்களுக்கு எதிராக சீனாவின் குற்றவியல் நீதித் துறை அமைப்பு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன் ஆகியோருடன் நட்புறவைக் கடைப்பிடித்தற்காக பலமுறை விமா்சனத்துக்கு உள்ளானேன். அணு ஆயுதங்களை வைத்துள்ள இத்தகைய நாடுகளுடன் நல்ல நட்புறவைக் கொண்டிருப்பது நல்லது.

2020, அதிபா் தோ்தலில் முறைகேடு நடந்தது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இது தொடா்பான வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. 2024 தோ்தலின்போது ஜனநாயக கட்சியினா் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ள டெட்ராய்ட், அட்லாண்டா நகரங்களுக்கு குடியரசுக் கட்சியினா் சென்று வாக்குகளைப் பாதுகாக்க வேண்டும்” என்றுள்ளார்.