அமெரிக்க விமானப்படை அக்கடமியின் பட்டமளிப்பு விழாவில், சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி ஜோ பைடன்
திடீரென தடுமாறி கீழே விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஜோ பைடன், விழா மேடையின் அருகே தடுமாறி விழுந்தார்.
துரிதமாக செயல்பட்ட விமானப்படை அதிகாரிகள் அவருக்கு உதவினர்.
பின்னர், அதிகாரிகளின் உதவி ஏதுமின்றி, அவர் நடந்து சென்று தமது இருக்கையில் அமர்ந்தார்.
விழாவின் போது சுமார் ஒன்றரை மணி நேரம் நின்ற நிலையில் 921 பேர்களுக்கு பட்டமளித்து, பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிலையில் வெள்ளைமாளிகை வெளியிட்ட தகவலில், ஜனாதிபதி ஜோ பைடன் நலமாக இருக்கிறார், பாதிப்பு ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.