“44% அமெரிக்க வரி என்பது வெறும் வர்த்தகப் பிரச்சினை மட்டுமல்ல, அது ஒரு விழிப்புணர்வு அழைப்பு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் அரசாங்கத்தில் இருந்தவர்கள் ஒவ்வொரு வர்த்தக ஒப்பந்தத்தையும் தடுத்தனர், உலகமயமாக்கலை அவநம்பிக்கை கொண்டனர்,
மேலும் முதலீட்டை ஒரு ஊடுருவலாகக் கண்டனர். அந்த மரபு முடிவுக்கு வர வேண்டும்,” என்று தெரிவித்த அவர் இலங்கைக்கு ஒரு மூலோபாய மறுசீரமைப்பு தேவை என்று வலியுறுத்தினார்.