அமெரிக்க பரஸ்பர தீர்வை வரி விவகாரத்தில் எவ்வித இறுதி ஒப்பந்தங்களும் இதுவரையில் கைச்சாத்திடப்படவில்லை எனவும் இது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வில் இன்று வியாழக்கிழமை (07) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
பொருளாதாரம் பாதிக்கப்படும் மீண்டும் நெருக்கடி ஏற்படும் என்ற கனவை மறந்து விடுங்கள். இடைக்கால ஜனாதிபதி என்பதொன்று ஏற்படாது. மாற்று வழியில் அரசியல் செய்யுங்கள் என்பதை எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
சர்வதேச நாணய நிதியத்தின் வரைபுக்கமைய பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும். அத்துடன் அமெரிக்க பரஸ்பர தீர்வை வரி விவகாரத்தில் எவ்வித இறுதி ஒப்பந்தங்களும் இதுவரையில் கைச்சாத்திப்படவில்லை என்பதுடன் இது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.