ஊழலை ஒழிப்பதாகக் கூறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில்தான் ஊழல்மிக்க அரசியல்வாதிகள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
