நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைகள் காரணமாக அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை மட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அரச செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை அத்தியாவசியப் பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அத்தியாவசியமான வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஒரு சிலரை மட்டும் பங்கேற்பதற்கு அவசியமான அலுவலர் ஒருவரை பங்கேற்கச் செய்ய வெண்டும் என ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.