கிளிநொச்சிக்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அக்ரோ ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவன செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
வடக்கு மாகாணத்தில் முதற் தடவையாக மேற்கொள்ளப்பட்டு, வெற்றியளித்துள்ள ‘லங்கா ஜம்போ’ நிலக்கடலை உற்பத்தி செயற்கையானது, கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் இடையே, வரவேற்பை பெற்றுள்ளது.
இவ்வாறு உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட போதும், ஏற்றுமதிக்கான வாய்ப்பு இல்லாத நிலையில், விவசாயிகளின் பிரச்சினைகளை அறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு நேரில் சென்று, விடயங்களை ஆராய்ந்தார்.