அம்பாந்தோட்டை துறைமுகம் போர் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக சீனாவால் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்துள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு குறித்து கவனமாக இருக்க வேண்டும் எனவும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிகவும் நட்பு ரீதியான உறவு உள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விமான சேவைகள் இடம்பெறுவதுடன் தற்போது கப்பல் போக்குவரத்தும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், இலங்கை தமது எரிசக்தி துறையை கட்டியெழுப்புவதற்கு இந்தியா உதவுகிறது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.