அம்பாறை மாவட்டத்தில் ஆயிரத்து 112 மாணவர்கள் ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்திற்குள்வாங்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான புலiமாப்பரிசிலினை வழங்கும் நிகழ்வு, அம்பாறையில் இரு அமர்வுகளாக இன்று நடைபெற்றது.
முதலாவது அமர்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் நடைபெற்றது. இரண்டாவது அமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.
அபிவிருத்தி லொத்தர் சபையின் அனுசரணையில் நடைபெற்ற நிகழ்வில்
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உள்ளிட்டோர் பிரதம
அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
ஜனாதிபதி செயலகத்தின் பிரதிநிதிகள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலக உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கல்வியதிகாரிகள் மற்றும் மாணவர்கள், மாணவர்களது பெற்றோர் என பெருந்திரலானோர் கலந்து கொண்டிருந்தனர்.