அம்பாறையில்தொடரும் சீரற்றகாலநிலை: மக்களின்இயல்பு வாழ்க்கைபாதிப்பு

0
53

அம்பாறையில் மழை மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை நீடித்து வருவதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கன மழையால், நாவிதன்வெளி ,கல்முனை முஸ்லீம் பிரிவு மற்றும் தமிழ் பிரதேச செயலக பகுதிகளில் உள்ள பிரதான வீதிகள் சிலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன், இன்று காலை பாடசாலைகளுக்குச் சென்ற மாணவர்களும் அசௌகரியங்களுக்குள்ளாகினர்.
பகல் வேளையில், வீதியால் பயணிக்கும் வாகனங்கள் ஒளிவிளக்குகளை ஒளிரவிட்டவாறு பயணிப்பதையும் அவதானிக்க முடிகின்றது. வெள்ள நீர் வடிந்தோட முடியாது, தடைப்பட்டுள்ள வடிகான்களை விரைந்து சீர்செய்யுமாறு கல்முனை மாநகர சபையிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.