அம்பாறையில் மக்கள் குடியியிருப்புக்களை அண்டியுள்ள, வயல் பகுதிகளில் முளைக்கும், புல் இனங்களை உண்பதற்காக யானைகள் படையெடுத்துவருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறை ஊடாக காரைதீவு, மாவடிப்பள்ளி, நிந்தவூர் ஆகிய பகுதிகளிலேயே யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு தேடி வருகின்றன. யானைக் கூட்டத்துடன் வரும் குட்டி யானைகளும், அப் பகுதியில் ஓடித்திரிந்து விளையாடுவதை அவதானிக்க முடிகிறது.
யானைகளைப் பார்வையிட மாவடிப்பள்ளி பாலம், காரைதீவு, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறைப் பகுதிகளுக்கு அதிகளவான மக்கள் வருகை தருவதையும் அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.